×

சீரமைக்கப்பட்ட தார்சாலை உயரமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்

 

பந்தலூர், டிச.25: பந்தலூர் அருகே உயரமான சாலையால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி பந்தலூரில் இருந்து பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு செல்லும் சாலை பந்தலூர் முனிஸ்வரன் கோயில் முதல் பாட்டவயல் செல்லும் சாலையில் தற்போது நெல்லியாளம் முதல் பொன்னானி சிமிர்னா ஹோம் வரை தார்சாலை புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலையில் ஏற்கனவே அகலம் குறைவாக உள்ளதால் வாகனங்கள் எதிரில் வந்தால் இடம் கொடுக்க முடியாமல் தினறுகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த சாலையில் மேலும் தார் போடப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையின் உயரம் அதிகமாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர். இரு சக்கர வாகனங்கள் சாலையின் ஓரங்களில் செல்ல முடியாமலும், சில நேரங்களில் சறுக்கியும் விழுகின்றனர்.

மேலும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் சாலையில் ஓரங்களில் இடம் கொடுத்தால் வாகனம் கவிழும் அபாயம் உள்ளது. இன்ஜின் அடிபட்டு பழுதடையும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையில் இரு பக்கமும் காங்கிரீட் மூலம் சாலையின் உயரத்திற்கு சமப்படுத்தி அகலப்படுத்த வேண்டும். மழைநீர் செல்ல சாலையோர கால்வாய்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post சீரமைக்கப்பட்ட தார்சாலை உயரமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Pandalur ,Nilgiris ,Bandalur… ,Dinakaran ,
× RELATED பந்தலூரில் கிழக்கு ஒன்றிய பகுதியில்...