×

சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறு விறு: 2 மாதத்தில் நிறைவு பெறும் என ஆணையாளர் தகவல்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் டிச. 2022 க்குள் நிறைவு பெறும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார். சிவகாசி மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மாநகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைபடுகிறது. தற்போது வெம்பக்கோட்டை அணை, மற்றும் மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக போக்க ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த படுத்த பட்டு வருகிறது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் கிணறுகள் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில் வழியாக குழாய்கள் பதித்து சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் எடுத்து வரப்படுகிறது. தற்போது சங்கரன் கோவிலில் தரை மட்ட நீர் தேக்க தொட்டி கட்டி முடிக்கபட்டுள்ளது.பழவூரில் இருந்து தாமிரபரணி நீர் குழாய் மூலம் எடுத்து வரப்பட்டு இங்கு தேக்கி வைக்கப்படும். இங்கிருந்து புளியங்குடி, சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளுக்கு தனியாக குழாய் பதித்து தாமிரபரணி நீர் கொண்டு வரப்படுகிறது. சிவகாசி மாநகராட்சியில் தற்போது தாமிரபரணி குடிநீர் கொண்டு வரும் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக சிவகாசி அம்பேத்கார் சிலையி்ன் பின்புறம் 4 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலைநீர்தேக்க தொட்டி, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே 3 லட்சம் லிட்டர் குடிநீர் மேல்நிலைநீர் தேக்க தொட்டி கட்டி முடிக்க பட்டுள்ளது. இந்த நீர் தேக்க தொட்டிகளில் தாமிரபரணி நீர் தேக்கி பொதுமக்களுக்கு விநியோகிக்க படவுள்ளது. இதே போல் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு தாமிரபரணி குடிநீர் இணைப்பு வழங்க குழாய் பதிக்கும் பணிகள் 100 சதவீதம் முடிவடைந்துள்ளது. குழாய் பதிக்கும் பணிக்காக சிவகாசி மாநகராட்சி பகுதியில் புதிதாக சாலை போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முழுமயைாக முடிக்க பட்டு குடீநீர் விநியோகிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘‘சிவகாசி மாநகரில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் குடிநீர் விநியோகம் மற்றும் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த குழாய்களை இணைக்க பட்டு தண்ணீர் லீக் உள்ளதா என சோதனை நடத்தும் பணி துவங்கப்பட்டு இரண்டு மாதத்தில் குடிநீர் வழங்க படும். இத்திட்டத்தில் தினமும் 70 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து வரப்படவுள்ளது. சிவகாசி மாநகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவை இந்த திட்டம் மூலம் நிரந்தரமாக தீர்க்கபடும். திருத்தங்கல் நகரில் குழாய் பதிக்கும் பணி 80 சதவீதம் மட்டுமே நடைபெற்றுள்ளது’’ என்றார்….

The post சிவகாசி மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் விறு விறு: 2 மாதத்தில் நிறைவு பெறும் என ஆணையாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thamirapharani ,Sivakasi Corporation ,Sivakasi ,Sivakasi Municipal Corporation ,Dinakaran ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி