×

சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.17 கோடி கடன்

சிவகங்கை, மே 5: சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் சுயஉதவிக் குழு இயக்கத்தை மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுயசார்புத் தன்மை மூலம் பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்திடும் பொருட்டும், படித்த வேலைநாடும் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு மேம்பாட்டு பயிற்சி அளித்திடும் பொருட்டும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக தொலைநோக்குப் பார்வையுடன் துவங்கப்பட்ட திட்டமான மகளிர் சுயஉதவிக் குழு திட்டம், தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள 12 வட்டாரங்களில் மொத்தம் 9,746 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அதில், மொத்தம் 1,08,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த சுயஉதவிக் குழுக்களுக்கு 2022-23ம் நிதியாண்டில் சமுதாய முதலீட்டு நிதியாக 1,110 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.16.65 கோடியும் மற்றும் ஆதார நிதியாக 532 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.79.80 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்றவாறு உரிய திட்டமிடல் மற்றும் தொழில் மேம்பாடு ஆகியன குறித்தும், அரசின் பிற துறைகளின் மூலம் வழங்கப்படும் மானியத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் பயனடைந்து வருகின்றனர்.

The post சிவகங்கை மாவட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.17 கோடி கடன் appeared first on Dinakaran.

Tags : Sivagangai district ,Sivagangai ,Dinakaran ,
× RELATED உரச்செலவை குறைத்து அதிக மகசூல் பெற...