×

சிறுமிக்கு பாலியல் தொல்லை

சாம்ராஜ்நகர்: 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை ேபாலீசார் தேடி வருகின்றனர். சாம்ராஜ்நகர் மாவட்ட கொள்ளேகால் டவுன் பீமாநகர் காலனியை சேர்ந்தவர் குள்ளய்யா. இவரது மகன் சிவகுமார். இவர் அதே காலனியில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து,  சிறுமி கூச்சலிட்டார். சிறுமியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிவகுமாரிடமிருந்து சிறுமியை மீட்டனர். சிவகுமார் அவர்களிடமிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தலைமறைவான சிவகுமாரை தேடி வருகின்றனர்….

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Tags : Samrajnagar ,Taliban ,Samrajnagar District ,Udekal ,
× RELATED கன்று குட்டியை வேட்டையாடிய சிறுத்தை