×

சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனு நிராகரிப்பு

புதுடெல்லி: தேசிய பங்கு சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியனின் ஜாமீன் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது. தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை பதவியில் வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தனது பதவிக் காலத்தில் பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை வெளியிட்டது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டியது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, சித்ரா ராமகிருஷ்ணனை டெல்லியில் கடந்த மார்ச் 7ம் தேதி கைது செய்தது. அவரைத் தொடர்ந்து, அவரது ஆலோசகரும் குழு அதிகாரியுமான ஆனந்த் சுப்பிரமணியனும் கைதானார். பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இவர்களுக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், இவர்கள் ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஜாமீன் வழங்க போதிய காரணம் இல்லாததால், ஜாமீன் வழங்க மறுத்து சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால் உத்தரவிட்டார்….

The post சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமீன் மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chitra Ramakrishnan ,New Delhi ,Delhi High Court ,National Stock Exchange ,Anand Subramanian ,Dinakaran ,
× RELATED கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு...