×

சித்தாமூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவை பயிற்சி முகாம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மையம்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் சிறப்பு பிரசாரம் 2.0 மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவைகள் குறித்த பயிற்சி முகாம் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், தங்கராஜ்  ஆகியோர் தலைமை வகித்தனர்.முகாமில்,  ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலர் குணசேகரன், செங்கல்பட்டு மாவட்ட மறுவாழ்வு மைய அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு, திட்டம் குறித்த சிறப்பம்சங்களை விவரித்தனர்.  மேலும் கழிவறை, குடிநீர் குழாய், இருக்கைகள் போன்றவற்றை மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பயன்படுத்த எவ்வாறு வடிவமைப்பது, வேலை வாய்ப்பு குறித்தும் ஊராட்சிமன்ற தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் டைகர் குணா, ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் க.நிர்மல்குமார், சித்தாற்காடு ஊராட்சிமன்ற தலைவர் ஏ.சிற்றரசு, கூட்டமைப்பு பொருளாளர் பா.சிவக்குமார், பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டர். இதில்,  40க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பயிற்சிபெற்றனர்….

The post சித்தாமூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார தேவை பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Chittamur ,Madhurandakam ,Chengalpattu District Rehabilitation Center ,
× RELATED மதுராந்தகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை