×

மதுராந்தகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை


மதுராந்தகம்: மதுராந்தகத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் சுரேந்தர் (40). மதுராந்தகம் காவலர் குடியிருப்பில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். காவலர் சுரேந்தர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சுரேந்தர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தாராம். மனைவி மற்றும் குழந்தைகள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், சுரேந்தர் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்நிலையில், சுரேந்தர் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தில் வசிக்கும் காவலர்கள் மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சுரேந்தர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதையடுத்து, போலீசார் சுரேந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மதுராந்தகத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Madhurandakam ,Maduraandakam ,Chittamur police station ,Madhurantagam ,Chengalpattu district ,Madhuranthakam.… ,Maduranthakam ,
× RELATED கோடையில் இதுவரை இல்லாத அளவிற்கு...