×

சிதம்பரத்தில் அதிமுக செல்லூர் ராஜுவை கண்டித்து மாஜி ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், மே 17: சிதம்பரம் காந்தி சிலை அருகே நேற்று அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கண்டித்து முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா, பாகிஸ்தான் போரின்போது ராணுவத்தினர் எல்லைக்கு சென்று துப்பாக்கியால் சுட்டார்களா என ராணுவத்தினரை கேலியாக விமர்சனம் செய்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜுவை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோன்று கட்சி தலைமை எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கோர வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் எங்களின் வயிற்றெரிச்சல் உன்னை சும்மா விடாது எனவும், நீ எங்கு தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற முடியாது எனவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

The post சிதம்பரத்தில் அதிமுக செல்லூர் ராஜுவை கண்டித்து மாஜி ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sellur Raju ,Chidambaram ,MLA ,Gandhi statue ,India-Pakistan war… ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்