×

சிங்கம்புணரி அரசு பள்ளியில் மலர் தூவி மாணவர்களுக்கு வரவேற்பு

சிங்கம்புணரி, ஜூன் 13: சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டின் முதல் நாள் வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதனால் சிங்கம்புணரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் காலை முதல் பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்தனர். அவர்களை வரவேற்கும் விதமாக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக சிவப்பு கம்பளம் விரித்து ஆசிரியர்கள் மாணவர் சங்கத்தினர் மாணவர்களை மலர் தூவி வரவேற்பு அளித்தனர். மேலும் மாணவர்களுக்கு பேனா, இனிப்புகள் வழங்கினர்.

முன்னாள் மாணவர் சங்கர் தலைவர் சேதுராமலிங்கம் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் 10,12 வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா என பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்து தர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

The post சிங்கம்புணரி அரசு பள்ளியில் மலர் தூவி மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Singampunari Government School ,Singampunari ,Singampunari Government Boys High School ,
× RELATED களைகட்டிய மஞ்சுவிரட்டு