×

சாலை விபத்தில் சிக்கிய விவசாயி கால் அகற்றம்

 

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ராஜா நகரம் கிழக்கு கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் பற்குணம் (52). விவசாயியான இவரது விவசாய நிலத்தில் பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டு பற்குணம் வீட்டிற்கு பைக்கில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

நரசம்பேட்டை கிராமம் பேருந்து நிறுத்தம் வளைவு அருகே வந்தபோது, எதிரே அதிவேக வந்த டிராக்டர் ைபக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பற்குணத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, பற்குணத்தின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், காலின் முட்டிக்கு கீழ் அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்டது. விபத்து குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சாலை விபத்தில் சிக்கிய விவசாயி கால் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : R.K.Petta ,Partgunam ,Raja Nagar East Village ,R.K.Petta Union ,Dinakaran ,
× RELATED மாவட்டம் முழுவதும் மழையால் சேதமான சாலைகள் சீரமைப்பு