×

சாலையில் தண்ணீர் கசிவு பாஜகவினர் சாலை மறியல்

 

திருப்பூர்,மே.25: திருப்பூர் பாளையக்காடு பகுதியில் புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக தார் சாலை அமைக்கப்பட்ட பாளையக்காட்டில் முருகப்ப செட்டியார் வீதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தார் சாலையின் மீது தண்ணீர் கசிவு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதுகுறித்து புகார் அளித்தும் முறையாக குழாய் உடைப்பை சரி செய்யாமல் தார் சாலை அமைத்து இருப்பதாகவும்,மேலும் பல்வேறு இடங்களில் பணிகள் முழுதாக முடிக்கப்படாமல் பணிகள் முடிந்ததாக சான்று பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் திருப்பூர் ஊத்துக்குளி சாலை பாளையக்காடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி இணை ஆணையர் பாஜகவின் புகார் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். குழாய் உடைப்புகளை சரி செய்து தார் சாலை முழுவதுமாக சரி செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து பாஜகவினர் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.இந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post சாலையில் தண்ணீர் கசிவு பாஜகவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Tiruppur ,Palaiyakkad ,Murugappa Chettiar Road ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...