×

சாத்தூர் பகுதியில் சுகாதாரமின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சாத்தூர், ஜூலை 30: சாத்தூர் நகர் பகுதியில் சுகாதாரமின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் மெயின் ரோடு, படந்தால் சாலை, வெம்பக்கோட்டை சாலை மற்றும் வெங்கடாசலபுரம், படந்தால், அண்ணாநகர் ஆகிய பகுதியில் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுமதி பெறாமல் திறந்த வெளியில் அதிகளவில் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் இறைச்சிகளுக்காக ஆடு, மாடு சுகாதாரமின்றி மக்கள் முன்னே வெட்டப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் முறையாக நகராட்சி வதை கூடத்திற்கு கொண்டு சென்று ஆடு, மாடுகளுக்கு நோய்கள் எதுவும் உள்ளதா என சுகாதார ஆய்வாளர்கள் பரிசோதனை செய்த பின்பே விற்பனை செய்ய வேண்டும். இது எதுவும் பின்பற்றாமல் திறந்த வெளியில் இறைச்சி விற்பனை செய்யப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உள்ளாட்சி நிர்வாகம் சாலை ஓரங்களில் சுகாதாரம் இல்லாம் செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாத்தூர் பகுதியில் சுகாதாரமின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chatur ,Chatur Nagar ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது