×

சாத்தூரில் சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து: கட்டுப்படுத்த கோரிக்கை

 

சாத்தூர், நவ.8: சாத்தூர் நகர் பகுதிகளான வெம்பக்கோட்டை சாலை, மெயின் ரோடு, ஊராட்சி ஒன்றிய அலுவலக சாலை பகுதியில் இரவு பகல் நேரத்தில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகள் பாலங்கள், சாலைகளிலும், தெருக்களிலும் மறியல் செய்வது போல் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் கூட்டமாக நிற்கின்றன. இதனால் சாலை வழியாக கார், இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. ஆகவே மாடுகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். வாகன ஓட்டிகள் கூறுகையில், சாத்தூரில் சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து நடக்கிறது. டூவீலர்களில் இருந்து கீழே விழுந்து பலர் காயமடைகின்றனர். எனவே விபத்துக்களை தடுக்க சாத்தூரில் சாலையில் மாடுகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post சாத்தூரில் சாலையில் சுற்றும் மாடுகளால் விபத்து: கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chaturil ,Chathur ,Chaturnagar ,Wembakottai Road ,Main Road ,Uratchee Union Office Road ,Sathur ,Dinakaran ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!