×

சளி காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடி சிகிச்சை பெற வேண்டும்

சேலம், செப்.14: பருவநிலை மாற்றத்தால் சளி காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற பாதிப்புகளுக்கு உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் எடுத்துக்கொள்ள கூடாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பச்சிளங்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சளி காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிட கூடுதலாக காணப்படுகிறது. சரியான முன்னேச்சரிக்கை நடவடிக்கை பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சளி காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் சுய மருத்துவம் எடுத்துக்ெகாள்ள கூடாது. அதே போல் மருத்துவரின் பரிந்துரையின்றி தனியார் மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்க சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்தவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வேண்டும். தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கழிவுநீரில் கொசுப்புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் சூழல் உள்ளது.

இதனால் ெபாதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகள் உண்டாக்குக்கும் அபாயமும் காணப்படுகிறது. எனவே வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே போல், வீட்டில் தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டிகள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்களை வாரத்திற்கு ஒருமுறையாவது பிளிச்சிங் பவுடர் மூலம் சுத்தமாக கழுவி தண்ணீர் தேக்கி வைத்து பயன்படுத்த வேண்டும். வீடுகளில் பயன்படுத்தப்படாத பழைய டயர்கள், உரல், அம்மிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகளை அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க சுடு தண்ணீரை குடிக்க வேண்டும். பெரியவர்களுக்கு சளி, உடல்சோர்வு உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் வீட்டில் உள்ள கைக்குழந்தைகளை தொடுவது, முத்தமிடுவது, கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் வெளியில் சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை சாப்பிடுவது மற்றும் சுயமாக பாராசிட்டாமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

The post சளி காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடி சிகிச்சை பெற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்த கணவர் சாவு மருத்துவமனையில் மனைவி தற்கொலை