×

சமையல் நிகழ்ச்சியில் பிரபலமாவதற்காக காப்பு காடுகளில் அத்துமீறி நுழையும் யூ டியூபர்கள்

குன்னூர்: சமையல் நிகழ்ச்சியில் பிரபலமாவதற்காக நீலகிரி காப்பு காடுகளுக்குள் யூ டியூபர்கள் அத்துமீறி நுழைந்து டிரோன் கேமராவில் வீடியோ எடுக்கின்றனர். தற்போது, சமூக வலைதளமான யூ டியூபில் `நாட்டாமை சமையல்’ என்ற நிகழ்ச்சி ஏராளமானோரை கவர்ந்துள்ளது. இதில், பிரபலமாவதற்காக சிலர் நீலகிரியில் குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த  காப்பு காடுகளுக்குள் அத்துமீறி சமையல் நிகழ்ச்சி நடத்தி வீடியோ எடுத்து வருகின்றனர். காப்பு காடுகளுக்குள் ட்ரோன் கேமரா பயன்படுத்த தடை உள்ள நிலையில் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ட்ரோன் கேமரா எழுப்பும் சத்தம் காரணமாக வன விலங்குகள் அச்சமடைந்து ஓட்டம் பிடிக்கும். மேலும், பாதுகாக்கப்பட்ட வனத்தில் அடுப்பில் தீ மூட்டி சமைப்பதால் தீ விபத்து அபாயமும் உள்ளது. இதுபோன்று, காப்பு காடுகளில் அத்துமீறி சமையல் நடத்தி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக நினைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சமையல் நிகழ்ச்சியில் பிரபலமாவதற்காக காப்பு காடுகளில் அத்துமீறி நுழையும் யூ டியூபர்கள் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,
× RELATED நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக...