×

சட்டக்கல்லூரியில் சேர வேண்டி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் திருநங்கை மனு

 

கோவை, ஜூலை 22: கோவை தித்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரனிஷ்கா சின்ன முனியாண்டி (19). திருநங்கை. இவர், தித்திப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்தார். இவருக்கு சட்டம் படிக்க விருப்பம். இதையடுத்து, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதம் சட்டம் படிக்க வேண்டி விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. தனது மனுவை நிராகரிக்கப்பட்டதாக கருதிய நிலையில், கோவைக்கு வந்த தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரனிடம் நேற்று வழங்கினார்.

இது குறித்து பிரனிஷ்கா கூறுகையில், ‘‘திருநங்கைகள் பல்வேறு துறையில் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். நான் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டி விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், எனக்கு எவ்வித அழைப்பும் வரவில்லை. என் விண்ணப்பித்தை நிராகரித்து விட்டதாக நினைக்கிறேன். இதனால், எனக்கு சட்டம் படிக்க உதவி செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கு தனியாக சட்டக்கல்லூரிகளில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் மனு அளித்தேன்’’ என்றார்.

The post சட்டக்கல்லூரியில் சேர வேண்டி மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவரிடம் திருநங்கை மனு appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission ,Law College ,Coimbatore ,Pranishka Chinna Muniandi ,Diditpalayam ,Tittipalayam ,Dinakaran ,
× RELATED போதை மாத்திரை கடத்திய சட்டக் கல்லூரி மாணவர் கைது..!!