×

கோவை சேரன் மாநகர் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் செல்ல தடை

 

கோவை, ஜூன் 13: கோவை சேரன் மாநகர் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் செல்ல தடை விதித்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கோவை சேரன் மாநகர் பகுதியில் எப்சி குடோன் செயல்பட்டு வருகிறது. அந்த ரோட்டில் தினமும் 50க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள், காஸ் சிலின்டர் லாரிகள் வந்து செல்கின்றனர். மேலும், எப்சி குடோன் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் லாரிகள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.

இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த வழியாக வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதனை சரிசெய்ய பொதுமக்கள் போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய திட்டமிட்டனர்.

அதன்படி போலீசார் பகல் நேரங்களில் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் சென்று வர தடை விதித்துள்ளனர். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை மட்டுமே லாரிகள் அனுமதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால் அந்த ரோட்டை பயன்படுத்தும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

The post கோவை சேரன் மாநகர் எப்சி குடோன் ரோட்டில் லாரிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Cheran ,Municipal ,FC Gudon Road ,Coimbatore ,Cheran Municipal FC Gudon Road ,FC Gudon ,Cheran Municipal ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...