×

கோவை அரசு கலைக்கல்லூரி 2-ம் கட்ட கலந்தாய்வு துவங்கியது

 

கோவை, ஜூன் 7: கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.எஸ்.சி இயற்பியல், வேதியியல், கணிதம், பி.காம் உள்ளிட்ட 23 இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகிறது. இதில், நடப்பாண்டில் மொத்தம் 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு 34 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து மாணவர்களின் மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கல்லூரி சார்பில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. அரசு அறிவுறுத்தலின் பேரில் கலந்தாய்விற்கு மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதன்படி, முதல் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 328 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 1,105 இடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. இந்த கலந்தாய்வில் 185 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களில், 103 பேர் தாங்கள் விரும்பிய துறைகளை தேர்வு செய்தனர். மேலும், இன்று அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்க 1:20 என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post கோவை அரசு கலைக்கல்லூரி 2-ம் கட்ட கலந்தாய்வு துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Coimbatore Government Arts College ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...