×

கோவளம் ஊராட்சியில் நூலகம், பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

 

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கோவளம் ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நூலகம், பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா தங்கம் சுந்தர் தலைமை தாங்கினார். திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி புதிய பகுதி நேர கூட்டுறவுக் கடையை திறந்து வைத்தார். திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் புதிய நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஆதிலட்சுமி பெருமாள் கலந்துக் கொண்டனர்.

The post கோவளம் ஊராட்சியில் நூலகம், பகுதி நேர ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kovalam panchayat ,Tiruporur ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...