×

உயர்கல்வி, சுயதொழிலுக்கு தேசிய பென்ஷன் திட்டத்தில் பணம் எடுக்க அனுமதி

புதுடெல்லி: தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தில் ஒரு பகுதியை உயர்கல்வி செலவுகள், சுயதொழில் தொடங்குதல் போன்ற தேவைகளுக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் தேசிய பென்ஷன் திட்டமும் ஒன்று. இதுபோல் அடல் பென்ஷன் திட்டம் என்ற ஓய்வூதிய திட்டமும் உள்ளது. இந்த இரண்டிலும் சேர்த்து 2.13 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த இரண்டு திட்டங்களையும் ஓய்வூதிய நிதி மற்றும் ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (பிஎப்ஆர்டிஏ) செயல்படுத்தி வருகிறது. இதன்படி ₹2.38 லட்சம் கோடி நிதி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 இவற்றில் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை உயர்கல்வி மற்றும் தொழில் தொடங்குவதற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிஎப்ஆர்டிஏ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆணையம் வௌியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர்கள், தாங்கள் முதலீடு செய்த தொகையில் ஒரு பகுதியை உயர்கல்வி, தொழில்நுட்ப கல்வி போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் சுயதொழில் தொடங்கவும், வேறு ஒருவரிடம் இருந்து தொழிலை கையகப்படுத்தவும் பென்ஷன் திட்டத்தில் இருந்து விதிமுறைகளுக்கு உட்பட்டு பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானியங்கி முறையிலும், விருப்பத்துக்கு ஏற்ப முதலீட்டை தேர்வு செய்து ெகாள்ளும் வகையிலும் இரண்டு வித பிரிவுகளை பென்ஷன் திட்டத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதில் தானியங்கி முறையை தேர்வு செய்பவர்களுக்கான பங்கு முதலீட்டு வரம்பு 50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

Tags :
× RELATED அக்-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!.