×

கோயில்களை அரசு விடுவிக்க வேண்டும்: ஈஷா சார்பில் பாடல்கள் பாடி பிரசாரம்

கோவை: தமிழக கோயில்களை பாதுகாக்கும் விதமாக கோயில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ளார். அடுத்த கட்டமாக, இவ்வியக்கத்திற்கு மாவட்டந்தோறும் ஆதரவு திரட்டும் வகையில், தஞ்சாவூர் பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், கோவை மருதமலை முருகன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோயில், சேலம் பாண்டுரங்கன் கோயில், பவானி சங்கமேஷ்வரர் கோயில், சுசீந்திரம்  தானுமலையான் கோயில், சென்னை மருந்தீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை சிவன் கோயில் ஆகிய 11 கோயில்களில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஈஷா சம்ஸ்கிரிதி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பக்தி பாடல்கள் பாடி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அவர்கள் தேவாரம், கந்த சஷ்டி கவசம், அம்மன் பாடல்கள் உள்ளிட்ட பக்தி பாடல்களை பாடினர். இதை தொடர்ந்து ஒவ்வொரு கோயில்களின் முன்புறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு கோயில்அடிமைநிறுத்து என்ற பதாகையை ஏந்தி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும், கோவை ஆதியோகி முன்பும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக, இவ்வியக்கத்திற்கு நடிகர் சந்தானம், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, கஸ்தூரி, கங்கனா ரெனாவத், திரவுபதி பட இயக்குநர் மோகன் உள்ளிட்ட பல்வேறு சினிமா பிரபலங்கள், அரசியல், வர்த்தகம் போன்ற துறைகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள் ஆதரவு அளித்தனர்….

The post கோயில்களை அரசு விடுவிக்க வேண்டும்: ஈஷா சார்பில் பாடல்கள் பாடி பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Govt ,Isha ,Coimbatore ,Tamil Nadu ,Isha Foundation ,Sadhguru ,Koil Aadhu Vathkaku ,
× RELATED ஈஷா யோக மையம் தொடர்பான...