×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது

 

அம்பத்தூர்: முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கடப்பா, மாலூர், ஒசூர், தேங்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை மற்றும் ஜாதிமல்லி பூக்கள் விற்பனைக்கு வருகிறது. வேலூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் அனைத்து பூக்களும் வருகிறது.

கடந்த சில நாட்களாக பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி மற்றும் ஐஸ் மல்லி ரூ.750க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.1000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி பூ ரூ.100க்கும் சாமந்தி ரூ.20க்கும், சாமந்தி ரூ.70க்கும், சம்பங்கி ரூ.60க்கும், பன்னீர் ரோஸ் ரூ.30க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘முகூர்த்த நாள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. வருகின்ற வியாழக்கிழமை கார்த்திகை பிறப்பதால் அன்றுமுதல் அனைத்து பூக்களின் விலை மீண்டும் படிப்படியாக உயரும்,’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Koyambedu market ,Koyambedu ,Andhra Pradesh ,Kadapa ,Malur ,Hosur ,Thenganikottai ,Rayakottai ,Salem ,Mallikai ,Mullai ,
× RELATED பனிப்பொழிவு, வரத்து குறைவால்...