×

கோபி அருகே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வனசரக அலுவலகத்தில் நடந்தது

 

கோபி, ஜூலை 8: கோபி அருகே விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வனசரக அலுவலகத்தில் நடைபெற்றது. கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனச்சரக அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் குன்றி, விளாங்கோம்பை, கணக்கம்பாளையம், பகவதி நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அடிக்கடி மனித- வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க டி.என்.பாளையம் வனசரக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

வனச்சரக அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதில் வனவிலங்குகளால் ஏற்படும் பயிர்சேதம், நிவாரணம் உயர்த்தி வழக்கல், அகழி, சோலார் மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் தெரிவித்தனர். கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கோபி அருகே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வனசரக அலுவலகத்தில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Forest Office ,Gobi ,Farmers Grievance Day ,Dinakaran ,
× RELATED இ.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்