×

கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களுக்கு கடலோர சாகர் கவாச் பயிற்சி

அறந்தாங்கி, நவ. 21: கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களுக்கு கடலோர காவல்படை சார்பில் சாகர் கவாச் பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடிதுறைமுகத்தில் இந்திய கடலோர காவல் படையின் சார்பில் மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பு சாகர் கவாச் எனும் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழு இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் கோட்டைப்பட்டினம் மீன்பிடிதுறை முகத்தில் விசைப்படகுகளில் இருந்த மீனவர்களிடம் பாதுகாப்பு தொடர்பாகவும், வெளிமாநிலத்தில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் யாரேனும் வந்தால் தகவல் கொடுக்க கோரியும் விழிப்புணர்வு வழங்கினர். இந்த விழிப்புணர்வு பயிற்சி கட்டுமாவடி முதல் திருப்புனவாசல் அருகே ஏனாதி வரை 42 கிலோ மீட்டருக்கு நடைபெறும். இந்த சாகர் கவாச் என்னும் பயிற்சி இன்றும் நடைபெற உள்ளது.

The post கோட்டைப்பட்டினத்தில் மீனவர்களுக்கு கடலோர சாகர் கவாச் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Kottapatnam ,Arandangi ,Coast Guard ,Sagar Gavach ,Kottapattinam Fishing Harbour ,Pudukottai District ,Kottapattinam ,Fishery Port ,Coastal Security ,Indian Coast Guard ,
× RELATED பழவேற்காடு அருகே கரை ஒதுங்கிய...