×

கொரோனா 3-ம் அலையில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி

டெல்லி: 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனையை மேற்கொள்ள முதல் முறையாக சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா 3 -வது அலையில் சிறுவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால் அவர்களை பாதுகாக்க தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில் ஜைடஸ் காடிலா  நிறுவனத்தில் தயாரிப்பான டி.என்.எ. தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களுக்கு அவசரகால பயன்பாடாக செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று சீரம் நிறுவனமும் இதே வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனையை  பெற்றுள்ளது. அந்நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவன மேற்கொண்ட பரிசோதனையின் அடிப்படையில் 100 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தியதால் ஆக்கபூர்வமான முடிவுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் சீரம் நிறுவனம் 7 வயது முதல் 1 வயதுள்ள சிறுவர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனையை நடத்த உள்ளது இந்தியாவில் இதுவரை 87 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுளள்து குறிப்பிடத்தக்கது. …

The post கொரோனா 3-ம் அலையில் இருந்து சிறுவர்களை பாதுகாக்க 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Union Drug Regulatory Commission ,3rd wave of Corona ,Delhi ,Union Drug Quality Control Corporation ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...