×

கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 29,717 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: கொரோனா தொற்றில் இருந்து நேற்று மட்டும் 29,717 பேர் குணமடைந்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:  தமிழகத்தில் நேற்று 1,72,424 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 33,764 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 4,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 29,717 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 16,13,221பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,10,224 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 475 பேர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து மொத்தம் 21,815 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையில்- 3561 பேர், செங்கல்பட்டு- 1302, கோவை- 4268, ஈரோடு- 1642, காஞ்சிபுரம்- 909, மதுரை- 1538, திருவள்ளூர்- 1181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை பின்னுக்கு தள்ளிய கோவைதமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. இதைக்குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதன்பயனாக சென்னையில் தொற்று குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒட்டுமொத்தமாக 3561 பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர். இதைவிட கோவையில் ஒருநாள் பாதிப்பு 4268 ஆக அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் கொரோனா பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி கோவை முதலிடத்தில் இருக்கிறது. …

The post கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 29,717 பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Corona ,Chennai ,Health Department ,Tamil Nadu ,
× RELATED அரசு மருத்துவமனைகளில் பணியில் சேராத 193...