×

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை; 12.7 செமீ மழை பதிவு

திண்டுக்கல்: கொடைக்கானலில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் அருவிகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் படகு குழாமில் 12.7 செமீ மழை பதிவாகியுள்ளது. திண்டுக்கல் நகரில் நேற்று மதியம் முதல் பரவலாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திண்டுக்கல் நகரில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.கொடைக்கானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 3 தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் சாரல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் இது கன மழையாக மாறியது. இந்த மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நகரில் ஒரு சில பகுதிகளில் சிறிது நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை காரணமாக, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளிலும், ஓடைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதபோல் பழநி, சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு(மில்லி மீட்டரில்):  கொடைக்கானல் படகு குழாம்-127.9, திண்டுக்கல்-10.6, கொடைக்கானல்-53, பழனி-31, சத்திரப்பட்டி-57.2, வேடசந்தூர்-1.2, புகையிலை நிலையம்-1.2….

The post கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை; 12.7 செமீ மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Dinakaran ,
× RELATED கோபுர கலசம் விற்கும் ரைஸ்புல்லிங்...