×

கைநழுவும் தொகுதிகள் வருத்தத்தில் எம்எல்ஏக்கள்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பறக்க துவங்கியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, கோவை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளை கேட்டுப்பெற வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு, தோல்வி கண்டது. இறுதியில், கோவை தெற்கு மற்றும் கிணத்துக்கடவு என இரண்டு தொகுதிகள் மட்டுமே அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அ.தி.மு.க. சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜூனன், சண்முகம் ஆகியோர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, வால்பாறை தொகுதியும் அ.தி.மு.க. கையை விட்டு நழுவப்போகிறது. இத்தொகுதியை, த.மா.கா. குறி வைத்து, காய் நகர்த்தி வருவதால், இத்தொகுதியும் கூட்டணிக்கு சென்றுவிடும் என்ற நிலை உள்ளது. இதனால் சிட்டிங் எம்எல்ஏக்கள் வருத்தத்தில் உள்ளனர். ஆக மொத்தம், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 9 பேரில், 3 பேருக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இதேபோல், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஓ.கே.சின்னராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள் மேலிட நிர்வாகிகள். மொத்தத்தில் கோவை மாவட்டத்தில் பழசு 5, புதுசு 5 என்ற அடிப்படையில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறது. வாய்ப்பு இழந்தவர்கள், சைலன்ட்டாக இருந்து, ஒத்துழையாமை இயக்கம் நடத்தப் போகிறார்களாம்….

The post கைநழுவும் தொகுதிகள் வருத்தத்தில் எம்எல்ஏக்கள் appeared first on Dinakaran.

Tags : MLA ,Tamil ,Nadu ,Assembly ,Election ,Field ,A. Dt ,b.k. G.K. ,Bharatiya Janata Party ,Govai district ,Dinakaran ,
× RELATED உலகின் பெரிய நிறுவனங்களுக்கு...