×

கேரளாவில் யானைகள் முகாமில் ஹெர்ப்ஸ் வைரஸ் தாக்கி குட்டி யானை உயிரிழப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடை காட்டுப்பகுதியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை முகாம் உள்ளது. இந்த முகாமில் ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த யானை முகாமில் இருந்த ஸ்ரீகுட்டி என்ற 3 வயது குட்டியானைக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதற்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக கேரள வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவ அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் டாக்டர் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். கால்நடை மருத்துவ குழுவினரின் விசாரணையில், காட்டாக்கடை முகாமில் இருந்த ஸ்ரீகுட்டி யானை ஹெர்ப்ஸ் என்ற வைரஸ் தாக்கி பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கால்நடை மருத்துவ அதிகாரி ஈஸ்வரன் கூறுகையில், யானைகளை தாக்கும் ஹெர்ப்ஸ் என்ற வைரசால் பாதிக்கப்பட்டு ஸ்ரீகுட்டி யானை பலியாகியுள்ளது. இந்த வைரஸ் யானைகளை மட்டுமே தாக்கக்கூடியது ஆகும். இதனால் காட்டாக்கடை முகாமில் உள்ள அனைத்து யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வேறு யானைகளுக்கு பாதிப்பு இல்லை. தற்போது இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இதனால் தற்போது கேரளாவின் காட்டுப்பகுதியில் இருந்து யானை முகாம்களுக்கு கொண்டுவரப்படும் யானைகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பின்னரே மற்ற யானைகளுடன் முகாமில் விட வேண்டும். பரிசோதனை செய்யும் வரை முகாமில் தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று யானை முகாம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது….

The post கேரளாவில் யானைகள் முகாமில் ஹெர்ப்ஸ் வைரஸ் தாக்கி குட்டி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kerala forest ,
× RELATED கேரளம் ஆக மாறியது கேரளா