×

கூட்டணிக்கு இடங்களை ஒதுக்கி விட்டு திமுக வேட்பாளர் பெயர் பட்டியலை நாளைக்குள் அனுப்ப வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு துரைமுருகன் உத்தரவு

சென்னை: திமுக பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27ம் தேதி காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள்-நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் வாய்ப்புள்ள இடங்களை அவர்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் நம்முடைய கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர, திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர் பட்டியலை, 31ம் தேதிக்குள்(நாளை) தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திட மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்….

The post கூட்டணிக்கு இடங்களை ஒதுக்கி விட்டு திமுக வேட்பாளர் பெயர் பட்டியலை நாளைக்குள் அனுப்ப வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு துரைமுருகன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Duraimurugan ,DMK ,Chennai ,General Secretary ,President ,M.K. Stalin ,
× RELATED வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால்...