×

குன்னூரில் முதல்வர் மருந்தகங்களில் கூடுதல் பதிவாளர் ஆய்வு

 

ஊட்டி, மே 26: மேட்டுப்பாளையத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் உருளைக்கிழங்கு ஏல மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கூட்டுறவு நகர வங்கி கூட்டமைப்பு கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பிருந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குன்னூர் வந்த அவர், ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு பண்டகம், சாந்தூரில் செயல்படும் தனிநபர் தொழில் முனைவோரால் நடத்தப்படும் முதல்வர் மருந்தகம் மற்றும் கம்பையாடா, சேலாஸ் பகுதிகளில் அமைந்துள்ள முதல்வர் மருந்தங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளையும் ஆய்வு செய்தார். தற்போது புதிதாக, ரேஷன் கடைகளில் எலெக்ட்ரானிக் தராசை, பிஒஎஸ் மெஷினுடன் புளூடூத் மூலம் இணைத்து, பில் போடும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

அதில் உள்ள நிறை குறைகளை விற்பனையாளர்களிடையே கேட்டறிந்தார். மேலும் முதல்வர் மருந்தகங்களில் எவ்வாறு விற்பனையை பெருக்குவது மற்றும் டிக்கையாளரிடையேயான நல்லுறவை எவ்வாறு மேம்படுத்துவது என ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது கூட்டுறவுச் சங்கங்களின் நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் தயாளன், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் முத்துகுமார், கூட்டுறவு சார்பதிவாளர்கள் கார்த்திகேயன், நிசார், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

The post குன்னூரில் முதல்வர் மருந்தகங்களில் கூடுதல் பதிவாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Ooty ,Nilgiris Cooperative Marketing Society ,Mettupalayam ,Cooperative Urban Bank Federation ,Brinda ,Dinakaran ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...