×

குன்னம் அருகே முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

 

குன்னம், ஜூன் 26: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அசூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு, கடந்த 17ம் தேதி சந்தன காப்பு கட்டி, சக்தி அழைத்தல் தொடங்கி நாள்தோறும் முத்து மாரியம்மனுக்கு மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்றது. ஒன்பதாம் நாளான நேற்று ஸ்ரீமுத்து மாரியம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் மேள தாளங்கள் முழங்க தேரடிக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், குன்னம், அந்தூர், சித்தளி, எழுமூர், ஆய்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post குன்னம் அருகே முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Muthu Mariamman Temple Chariot ,Kunnam ,Muthu Mariamman ,Temple ,Chariot ,Asur ,Perambalur district ,Shakti ,Muthu Mariamman… ,Muthu Mariamman Temple ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...