×

கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் கண்ணகூத்த அய்யனார் கோயில் பங்குனி திருவிழா

கீழ்வேளூர்,ஏப்.14: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த அகரகடம்பனூர் கண்ணகூத்த அய்யனார் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பங்குனி திருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி ஊர்வலம் நடைபெற்றது. அகர கடம்பனூர் பெரியகுளத்தில் இருந்து 200க்கும் மேற்பட்டவர்கள் அலகு காவடி, மயில் இறகு காவடி ரத காவடி மற்றும் பால்குடம் எடுத்து முக்கிய தெருக்களில் வீதி உலா வந்து. பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு அய்யனார் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராமவாசிகள், விழாகுழுவினர் செய்திருந்தனர்.

The post கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் கண்ணகூத்த அய்யனார் கோயில் பங்குனி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Akarakadambanur Kannakoota Ayyanar Temple ,Kilivelur ,Akarakadambanur Kannakootha Ayyanar temple ,Nagapattinam ,Dinakaran ,
× RELATED இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா