×

கீழப்புலியூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி விழா

 

பெரம்பலூர், ஜூலை 6: பெரம்பலூர் அருகே கீழப்புலியூர் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சுதர்சன ஜெயந்தி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மங்கள வாத்தியம் முழங்க அனுக்ஞை, உலக நன்மைக்காக மக்கள் அனைவரும்அமைதியான சூழ்நிலையோடு வாழவும் எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் தொழில் மேன்மைக்காகவும் மகா சங்கல்பம் நடைபெற்றது. பின்பு யாக குண்டத்தில் பழ வகைகள், வேர் வகைகள் மூலிகைகள் ஆகியவற்றை கொண்டு மகா சுதர்சன மூல மந்திர ஜெப ஹோமங்கள் நடைபெற்றது.

நிறைவாக பூர்ணகுதி உச்சி காலத்தில் நடைபெற்று மகா சுதர்சனருக்கு கும்பங்கள் புறப்பாடாகி கும்ப தீர்த்தங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.சுதர்சன மகாயாகத்தை கோவில் ஸ்தானீக பட்டர் கோபாலன் அய்யங்கார், ஜோதிடர் ராம்ஆதித்யா பட்டர், காந்த் பட்டர் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில் அறநிலையத்துறை அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் கலியபெருமாள் மற்றும் கீழப்புலியூர், புதூர், சிறுகுடல் பெரம்பலூர் நகர பக்தர்கள் திரளான பேர் கலந்து கொண்டு சுதர்சனர் மற்றும் பெருமாள் – தாயாரை வழிபட்டனர்.

The post கீழப்புலியூர் வெங்கடேச பெருமாள் கோயிலில் சுதர்சன ஜெயந்தி விழா appeared first on Dinakaran.

Tags : Sudarshana Jayanti festival ,Keelappuliyur Venkatesa Perumal Temple ,Perambalur ,Tirupati Venkatesa Perumal Temple ,Keelappuliyur ,Venkatesa ,Perumal Temple ,
× RELATED கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் பிளஸ்2...