×

கிராம வங்கி முகவர்களுக்கு பரிசளிப்பு விழா

 

கோவை, மே 10: தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் கோவை வட்டார வணிக முகவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயலாற்றிய வணிக முகவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இந்நிகழ்வில், தமிழ்நாடு கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் இருந்து கந்தசாமி, மோகன், கோவை வட்டார மேலாளர் அலைஅரசன், கோவை துணை வட்டார மேலாளர் சரண்ராஜ், திட்ட அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜிடிஐடிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வரும் 5 வட்டாரத்தை சேர்ந்த வணிக முகவர்களில் மிக சிறப்பாக பணியாற்றி முதலிடம் பிடித்த பெருமாநல்லூர் கிளை சேர்ந்த கோகிலாராணியை பாராட்டி மின்சார இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது. வணிக முகவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்தது. தமிழ்நாடு கிராம வங்கியில் ஆனந்தம் வைப்பு தொகை திட்டத்திற்கு அதிக வட்டி தரப்படுகிறது. வீட்டுக்கடன், வாகன கடன் குறைந்தவட்டியில், செயலாக்க கட்டணம் மற்றும் பரிசீலனை கட்டணத்தில் தள்ளுபடியுடன் துரிதமாக வழங்கப்படுகிறது.

The post கிராம வங்கி முகவர்களுக்கு பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu Grama Bank ,Tamil Nadu Grama Bank… ,Dinakaran ,
× RELATED 25 ஆண்டுகளுக்கு கழித்து ரீ – ரிலீஸ்...