×

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஸ்டிரைக் கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, டிச.13: திருவண்ணாமலை மாவட்டத்தில், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி காலவறையற்ற வேைல நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதையொட்டி, கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய காலவறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். அதனால், தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமைல தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்க வேண்டும், கமலேஷ்சந்திரா குழுவின் பரிந்துரைகளை உடனே நிறைவேற்ற வேண்டும், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கைவிட வேண்டும், கிராமிய அஞ்சலகங்களுக்கு லேப்டாப், பிரிண்டர் அதிவேக இணைய வசதிகளை செய்துத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போளூர்: போளூர் தாலுகாவில் கிராமிய அஞ்சலக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று பணிக்கு வராததால் போளூர் தாலுகா பகுதியில் உள்ள 79 கிராமிய அஞ்சலகங்கள் நேற்று மூடப்பட்டன. இதனால் அஞ்சலக சேவைகள் பாதிக்கப்பட்டன.

The post கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஸ்டிரைக் கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai district ,Thiruvannamalai ,Tiruvannamalai district ,
× RELATED வாலிபர் பலியானதால் நடவடிக்கை...