×

காளையார்கோவிலில் நிழல் இல்லாத நாள்

காளையார்கோவில், ஏப்.16: காளையார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நிழல் இல்லாத நாள் நிகழ்வை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் ஏப்.14 முதல் ஏப்.16ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் நிழல் இல்லா நாள் நடைபெற்று வருகிறது. இன்று கண்ணங்குடி பகுதியில் நண்பகல் 12.14 மணியளவிலும் காளையார்கோவில், கல்லல், தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் நண்பகல் 12.15 மணியளவிலும் சிவகங்கை பகுதியில் நண்பகல் 12.16 மணியளவிலும் திருப்புவனம் பகுதியில் நண்பகல் 12.17 மணியளவில் நிழல் இல்லாத நாள் நடைபெற்றது. காளையார்கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்புறம் நண்பகல் 12.15 மணியளவில் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் நாள் நிகழ்வை மாணவர்கள் பெற்றோர்கள் கண்டு வியந்தார்கள். அவர்களுக்கு பூஜ்ஜிய நிழல் தின விளக்கங்களை தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி விவரித்துக் கூறினார். மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post காளையார்கோவிலில் நிழல் இல்லாத நாள் appeared first on Dinakaran.

Tags : Kalayarkovil ,Tamil Nadu Science Movement ,Shadowless Day ,Kalayarkovil Panchayat Council Office ,
× RELATED பள்ளியில் ரத்ததான தினம்