- கலிபட்டி கந்தசாமி கோயில்
- ஆட்டையாம்பட்டி
- பங்கூனி
- கிருத்திகை
- ஷஷ்டி நாள்
- முருகன்
- கந்தசாமி கோயில்
- காளிப்பட்டி
- சேலம்
- நாமக்கல்
ஆட்டையாம்பட்டி, மார்ச் 16: சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோயிலில், முருகனுக்கு பங்குனி மாத வளர்பிறை கிருத்திகை மற்றும் சஷ்டி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக, மூலவருக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோயில் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முருகன் முத்தங்கி அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்கள் ேகாயில் முன் உப்பு, மிளகு போட்டும், விளக்கேற்றியும் சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு வள்ளி- தெய்வானையுடன் முருகன் பல்லாக்கில் திருவீதி உலா கோயிலை சுற்றி வந்தது.
The post காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.