×

கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

போடி, நவ. 30: போடி பெரியாண்டவர் ஹைரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மழை வளம் பெருகவும், சுற்றுப்புற சுகாதாரத்தையும் காக்கவும், நிலத்தடி நீர் உயரத்தும் விதமாக மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து வளாகரம் முழுவதும் பல ரகங்களை கொண்ட மரக்கன்றுகளையும், பனை விதைகளையும்,பனை நாற்று க ளையும் சுமார் 50 திற்கும் மேல் நட்டு வைத்தனர். நிகழ்ச்சியில் வன பாதுகாலர் சந்திரசேகர், கால்நடை முதுநிலை மேற்பார்வையாளர் ஜெயக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முருகேசன், மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

The post கால்நடை மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Hospital ,Bodi ,District Veterinary Assistant Director ,Sivasubramanian ,Bodi Periyandavar High Road.… ,Tree sapling planting ceremony ,Dinakaran ,
× RELATED பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு...