×

காலை உணவு திட்டம் ஆய்வு

 

தொண்டி, ஆக.22: தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு துவக்க பள்ளிகளில் நேற்று காலை உணவு திட்டம் மாதிரி தயாரிக்கப்பட்டு பெற்றோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சத்துணவு திட்டத்தின் புதிய புரட்சியாக காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் 25ம் தேதி முதல்வரால் துவங்கப்பட உள்ள நிலையில், நேற்று ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தொண்டி கிழக்கு பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் (மாதிரி) தயாரிக்கப்பட்டு தலைமையாசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் உட்பட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது.

செல்வகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலக ராமநாதபுரம் திட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் நம்புதாளை அரசு துவக்கப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் வசந்த பாரதி தலைமையில் தலைமை ஆசிரியர் ஜான் தாமஸ் முன்னிலையில் உணவு வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் சுமதி முத்து ராக்கு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பெற்றோர்கள் சுலந்து கொண்டனர்.

The post காலை உணவு திட்டம் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thondi ,Dinakaran ,
× RELATED பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை