×

காப்பீடு செய்யப்பட்ட நபரை சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை

கோவை, செப். 7: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழத்தின் சார்பில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் காப்பீடு பெற்ற தொழிலாளர்களுக்கு இடர் ஏற்படும் காலங்களில் பணம் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. இது ஓய்வூதியர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. நிரந்தர உடல் ஊன உதவித்தொகை, சார்ந்தோருக்கான உதவித்தொகை பணியில் சேர்ந்த முதல் நாளில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த பண உதவிகள் காப்பீட்டாளர் சார்ந்த கிளை அலுவலக மேலாளரின் முயற்சியால் குறைந்த காலஅளவில் விசாரித்து உதவித்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள இஎஸ்ஐ சார் மண்டல அலுவலகத்தில் குறிச்சி, பாப்பநாயக்கன்பாளையம் கிளை அலுவலகத்துடன் இணைந்த காப்பீடு செய்த நபரை சேர்ந்த 4 பேருக்கு உதவித்தொகை ஆணை நேற்று வழங்கப்பட்டது.

அதன்படி, சக்தி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவன டிரைவராக பணியின் போது உயிரிழந்த விமல்தயாளன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு முதல் தவணை உதவித்தொகை ரூ.68,736 வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.6,992 வழங்கப்படவுள்ளது. லட்சுமி மில்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவன காவலர் ஆண்டனி மரியதா தேசே குடும்பத்திற்கு முதல் தவணையாக ரூ.1,22,932 வழங்கப்பட்டது. அவரது குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.14,130 வழங்கப்படவுள்ளது. டாடாபாத் பலேபு பார்மா டிஸ்ட்டிரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன கோமதியின் குடும்பத்திற்கு முதல் தவணை ரூ.26,568 வழங்கப்பட்டது. அவரது குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.4,920 வழங்கப்படவுள்ளது. ராமநாதபுரம் ஸ்ரீ பாலாஜி அருள்ஜோதி நிறுவனத்தில் டைனிங் மேற்பார்வையாளர் ஜெயக்குமார் குடும்பத்திற்கு முதல் தவணை ரூ.1,42,692 வழங்கப்பட்டது. அவரது குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.12,362 வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், இஎஸ்ஐ சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post காப்பீடு செய்யப்பட்ட நபரை சார்ந்தவர்களுக்கு உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Erode ,Nilgiris ,Tirupur ,Government ,Dinakaran ,
× RELATED ரோந்து செல்லும் போது துப்பாக்கி...