×

காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது-கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்

கரூர் : கரூர் தெற்கு காந்திகிராமம் பகுதியில் வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு காந்திகிராமம் என இரண்டு பகுதிகள் உள்ளன.தெற்கு காந்திகிராமம் பகுதியை சுற்றிலும் குடியிருப்போர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், குடியிருப்புகளின் நிலைக்கு ஏற்ப, இந்த பகுதியில் போதியளவு சாக்கடை வடிகால் வசதி இல்லை.இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, தெற்கு காந்திகிராமம் பகுதியில் மக்கள் நலன் மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post காந்தி கிராமம் பகுதியில் வடிகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது-கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Gandhi village ,Karur ,south ,Gandhikiram ,Dinakaran ,
× RELATED கரூர் அரசு மருத்துவக் கல்லூரி எதிரே பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?