×

காட்டாற்றில் கற்களை போட்டு பாதை சீரமைப்பு

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள  மாக்கம்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் உள்ள அரிகியம்,  மாக்கம்பாளையம், கோவிலூர், கோம்பை தொட்டி உள்ளிட்ட வன கிராமங்களுக்கு  கடம்பூரில் இருந்து அடர்ந்த வனப்பகுதியில் கரடு முரடான மண் சாலையில்  குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் என 2 காட்டாறுகளை கடந்து செல்ல  வேண்டிய நிலை உள்ளது. கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை  பெய்து வருவதால் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள 2 காட்டாறுகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக  மலை கிராம மக்கள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட தங்களது அன்றாட தேவைகளுக்காக  கடம்பூர் மற்றும் சத்தியமங்கலத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வரும்  சூழ்நிலை ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் காரணமாக மாக்கம்பாளையம் பகுதிக்கு  இயக்கப்படும் அரசு பஸ் இயக்கப்படவில்லை. இந்த நிலையில்  தற்போது குரும்பூர் பள்ளத்தில் வெள்ளம் வடிந்து தற்போது குறைவான அளவில்  தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக தற்போது மாக்கம்பாளையம் கிராமத்திற்கு  அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பைக், டெம்போ உள்ளிட்ட  வாகனங்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாததால் மலை கிராமங்களைச் சார்ந்த  பள்ளி மாணவர்கள் நேற்று குரும்பூர் பள்ளத்தில் இறங்கி வாகனங்கள் சேற்றில்  சிக்காமல் இருப்பதற்காக நீருக்குள் வாகனத்தின் டயர் செல்லும் பாதையில்  கற்களை போட்டு பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டாறுகளின் குறுக்கே புதியதாக பாலம் கட்ட ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட  நிலையில் மழை குறைந்ததும் விரைவில் பாலம் கட்டுமான பணிகளை மேற்கொள்ள  வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post காட்டாற்றில் கற்களை போட்டு பாதை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Magkampalayam Forest ,Kadampur ,Arigiyam ,Makambalayam ,
× RELATED கேர்மாளம் அருகே அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: பயணிகள் தப்பினர்