×

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: இன்று நடைபெறுகிறது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று 31ம்தேதி காலை 10 மணிக்கு காஞ்சிபுரத்தில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் மாவட்ட அவைத்தலைவர் சேகரன் தலைமையில் நடக்கிறது. கூட்டத்துக்கு, மாவட்ட துணை செயலாளர்கள் வெளிகாடு ஏழுமலை, தசரதன், வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்டசி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இதில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாநில, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்….

The post காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: இன்று நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Kanchi South District DMK Working Committee Meeting ,Kanchipuram ,Kanchipuram South District DMK ,K. Sundar ,MLA ,Kanchipuram South District DMK Working Committee ,Kanchi South District DMK ,Working ,Committee ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...