×

காங்கயம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 1,523 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு

 

காங்கயம், ஜூலை 5: காங்கயம் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 1,523 வழக்குகள்‌ பதியப்பட்டு உள்ளது. காங்கயம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் லயோலா இன்னாசிமேரி தலைமையில் கடந்த மாதத்தில் காங்கயம் தாராபுரம் சாலை, கோவை பிரதான சாலை, காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை ரோடு, திருப்பூர் ரோடு, திருச்சி பிரதான சாலை, பழையக்கோட்டை ரோடு மற்றும் முத்தூர் பிரிவு என அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

அப்போது 20 பேர் மீது குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாகவும், 8 பேர் மீது காரில் சீட்பெல்ட் அணிய தவறியது. 227 பேர் மீது தலைகவசம் இல்லாமல் வாகனம்‌ ஓட்டியது. ஒரு‌வர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது. 96 பேரின் மீது செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது. 291 பேர் மீது வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியது. 26 பேர் மீது ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டியது என மொத்தம் 1,523 வழக்குகள்‌ பதியப்பட்டு ஆன்லைன் மூலம் 24 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம், நீதிமன்ற அபராதம் ரூ.95 ஆயிரம் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடாமல் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

The post காங்கயம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் 1,523 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Kangayam Traffic Police Station ,Traffic Inspector ,Loyola Innasimeri ,Kangayam Tarapuram Road ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...