×

கள்ளச்சாராய தீமை குறித்து விழிப்புணர்வு

ராசிபுரம், ஏப்.24: ராசிபுரம் அருகே ஆண்டலூர்கேட் பகுதியில், தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தாசில்தார் சசிகுமார் மேற்பார்வையில், வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில், வருவாய் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கள்ளச்சாராயத்தை குடிப்பது, காய்ச்சுவது மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆண்டலூர் கேட், பிள்ளாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் வருவாய் துறையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post கள்ளச்சாராய தீமை குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Tamil Nadu Prohibition and Excise Department ,Andalurgate ,Tahsildar Sasikumar ,Revenue Inspector ,Karthikeyan ,Revenue Department ,
× RELATED விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சி