×

கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி : குடும்பத்துக்கு 11 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் ஆம்புலன்ஸ் மோதி கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியாகினர். இவர்கள் குடும்பத்துக்கு ரூ.11 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். ஏற்கனவே இருமுறை கருகலைந்தாக கூறப்படுகிறது. மேலும் இருமுறை பிரசவத்தின்போது குழந்தை பிறந்து இறந்துள்ளது. இதையடுத்து நேற்று அதிகாலை அங்கிருந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பினர். அவருடன் மாமியார் செல்வி(52), நாத்தனார் அம்பிகா(33), நர்ஸ் மீனா (50), உதவியாளர் தேன்மொழி(27) ஆகியோர் சென்றுள்ளனர். கலியமூர்த்தி (36) என்பவர் ஆம்புலன்சை ஓட்டினார். ஆலத்தூர் அடுத்த அரியபெருமானூர் ஏரிக்கரை அருகே சென்றபோது திடீரென டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கர்ப்பிணி ஜெயலட்சுமியை மாற்று ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தார். படுகாயமடைந்த டிரைவர் கலியமூர்த்தி, தேன்மொழி, மீனா ஆகியோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மூன்று பேருக்கும் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பணப் பயன்களை பெற்று வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்….

The post கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியதில் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி : குடும்பத்துக்கு 11 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Chief Minister ,M. K. Stalin ,M.K.Stal ,
× RELATED கல்வி, தொழில் வளர்ச்சிக்கு...