×

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவர் கைது

 

காஞ்சிபுரம், ஜூலை 1: காஞ்சிபுரம் அருகே திருப்பருத்திக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவர் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பகுதியில் சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3வது ஆண்டு படிக்கும் 20 வயதுடைய மாணவி ஒருவர் பல் மருத்துவச் சிகிச்சை பெற வந்திருந்த போது அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதனால் வெறுப்படைந்த மாணவி உடனடியாக பல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையில் குற்றச் செயலில் ஈடுபட்டது உறுதி எனத் தெரியவந்தது. இதனையடுத்து பல் மருத்துவர் மணிகண்டனை சிவகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளார்.

The post கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பல் மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Manikandan ,Thirupruthikkundram ,Pookadai Chatra ,
× RELATED வடகிழக்கு பருவமழை காரணமாக...