×

கலைஞர் பிறந்தநாளையொட்டி உடுமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு

உடுமலை, ஜூன் 4: கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பெரியபாப்பானூத்து, பூலாங்கிணறு, ராகல்பாவி மற்றும் வாளவாடி ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் உபகரணங்கள் வழங்கி மரக்கன்றுகள் நட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், திருமூர்த்திமலை அறங்காவலர் குழு தலைவர் ரவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் மணிகண்டன், மாவட்ட அயலக அணி துணைத்தலைவர் கார்த்திக்குமார், ஒன்றிய நிர்வாகிகள் ஞானசேகரன், ஈஸ்வரமூர்த்தி, சந்திரசேகர், ரவிக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சௌந்தர்ராஜன் மற்றும் ராதிகா இளங்கோவன், இளைஞர் அணி நிர்வாகிகள் விக்னேஷ்வரன் மற்றும் சரவணகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச்செயலாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் பிறந்தநாளையொட்டி உடுமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு appeared first on Dinakaran.

Tags : Udumalai Central Union DMK ,Kalaignar ,Udumalai ,Union Secretary ,Senthilkumar ,Periyapapanoothu ,Phulanginaru ,Ragalbavi ,Valavadi ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...