×

கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

 

திருப்பூர், மே 31: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி நல அலுவலர் (பொ) டாக்டர் கலைச்செல்வன் மற்றும் உதவி திட்ட இயக்குனர் ரமணன், டாக்டர் சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனா். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி பல்லடம் சாலை வழியாக சென்று எல்.ஆர்.ஜி. கல்லூரியை சென்றடைந்தது. இதில் நர்சிங் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Anti-Tobacco Day Awareness Rally ,Collector ,Office ,Tiruppur ,World No Tobacco Day ,Anti-Tobacco Day Rally ,Tiruppur District Collector ,District Tobacco Control Center of the Public Health and Immunization Department.… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...